கௌசல்யா - தமிழ்நாட்டின் மகள்

சமீபத்தில் திருப்பூர் நீதி மன்றம் உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. நம் ஜனநாயகத்தின் மீது வைத்துள்ள மிகச்சிறிய நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக இதைப் பார்க்க வேண்டும். இன்னும் எத்தனையோ வழக்குகளுக்கு தீர்ப்பு வராத நிலையிலும் இந்தத் தீர்ப்பை ஒரு சிறந்த முன்னோடியாகப் பார்க்க வேண்டும். எத்தனையோ ஆணவக் கொலைகள் நாளிதழ்களிலும் வருகின்றன. இந்த வாட்சப் காலத்தில் ஒரு கூட்டமே கூடி ஒருவரயோ அல்லது இருவரையுமோ அடித்துக் கொல்வதைக் கூட சுற்றி நின்று ஜாதிவெறி பிடித்த மனநோயாளிகள் கூட்டம் படம்பிடித்துக் கொண்டு இருக்கும் காட்சிகளைக் கூட காண்கிறோம். அப்படி இருக்கும் நிலையில் இந்தியாவிலே ஜாதிய எதிர்ப்பு சிந்தாந்தம் வலுவாக இருக்கும் (ஜாதிவெறியும் வலுவாகத்தான் இருக்கிறது) தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள ஆணவக் கொலைக்கு தூக்கு தண்டனை என்பதையும் நாம் பார்க்கிறோம். இந்தியாவில் இது வரை இப்படி ஒரு தீர்ப்பு ஆணவக் கொலைக்கு எதிராக வழங்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. தமிழகம் அதில் முதல் படியை எடுத்து வைத்திருக்கிறது.இதற்கு மூலகாரணமாக இருந்தது கண்காணிப்புக் கருவியில் பதிவாகி வெளியான சங்கரும் கௌசல்யாவும் வெட்டப்படும் காணொலிக் காட்சிகள் மட்டுமல்ல, மறுபிறவி எடுத்து அதற்காகப் போராடிய கௌசல்யா என்ற அற்புதமான பெண்ணின் துணையும் கூட. தனது கண்ணெதிரே கணவனைப் பறிகொடுத்து, தானும் வெட்டுக்களை வாங்கி, உயிர் காப்பாற்றப்பட்டு, பின்னர் தற்கொலைக்கு முயன்று தன்னைத் தேற்றிக் கொண்டு பெரியாரிய, தன்னார்வக் குழுக்களின் உதவியால் புது மனிதியாக மாறி தன் கண்வனை கூலிப்படை வைத்துக் கொலை செய்த, தனது தந்தைக்கே தூக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் மனித நேயப் போராளியாக மிளிர்கிறார், ஆளுமையாக வரலாறு படைத்திருக்கிறார் கௌசல்யா. அவரின் செயல்களை நினைக்கையில் அவர் மேல் நமக்கு பேரன்பும், பாசமும், பெருமிதமும் பெருகி வருகிறது. இந்தியாவில் இது வரை இப்படி ஒரு தீர்ப்பு ஆணவக் கொலைக்கு எதிராக வழங்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. தமிழகம் அதில் முதல் படியை எடுத்து வைத்திருக்கிறது.இந்தத் தூக்கு தண்டனை அறிவிப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்குக் கூட வழியில்லாமல் இருக்கிறது கௌசல்யாவின் குடும்பம். இப்படி ஒரு குடும்பத்தை நாசமாக்கியிருக்கிறது ஜாதி வெறி. இதற்கெல்லாம் கொஞ்சமும் கவலையில்லாமல் கூச்சப்படாமல் கௌசல்யாவை அசிங்கப்படுத்து வேலையை ஜாதி வெறி இழிபிறவிகள் செய்து வருகின்றனர். ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியிலிருக்கும் குடும்பப் பெண் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த ஜாதி ஆணைத் திருமணம் செய்வது உயிருக்கே உத்தரவாதமில்லாத செயலாக இன்றும் இருக்கிறது. இப்படி ஒரு குடும்பம் ஜாதிவெறியில் ஆணவக் கொலை செய்து தூக்கு தண்டனை வாங்கியிருக்கிறது, இதற்காக கொஞ்சமும் கவலையோ துயரமோ இல்லாமல் கௌசல்யாவை இழிவு செய்து மீம்களையும் கருத்துக்களையும் ஃபேஸ்புக்கிலும் வாட்சப்பிலும் பரப்பி வருகின்றனர். தேவர் ஜாதியினர்தான் தனது ஜாதிக்காரனுக்கு தூக்குதண்டனை வாங்கித்தந்ததால் கௌசல்யாவைத் திட்டுகின்றனர் என்று பார்த்தால், கொங்கு வேளாளக் கவுண்டர்கள், வன்னியர்கள், மாதிரி இன்ன பிற ஆண்ட பரம்பரைப் போலிப் பெருமையில் மூழ்கி இருக்கும் மனநோயாளிகளும் சேர்ந்து கௌசல்யாவை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தன்னுடைய கீழ்மையைக் காட்டி வருகின்றனர். கௌசல்யா தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இருக்கின்றன. அதை தூக்குதண்டனை வெளியான அன்று "சங்கர் இறந்ததிலிருந்து நான் நிம்மதியின்றி இருந்தேன். இத்தீர்ப்பு எனக்கு நிம்மதி அளித்தது என்று கௌசல்யா கூறியிருந்தார். இந்த செய்தியின் கீழே கௌசல்யா நிம்மதியின்றித் தவித்தபோது க்ளிக்கியது" என்று கீழ்க்காணும் படங்களைப் பகிர்ந்திருந்தார்கள். அதை எல்லா ஜாதியிலிருக்கும் நாடகக் காதல் என்ற கதையை நம்புகிற, தலித்கள் மேல் ஜாதிப் பெண்களை மணந்து கொண்டு பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கின்றனர் என்று நம்பும் ஜாதிவெறியர்கள் தத்தமது ஃபேஸ்புக்கில், வாட்சப் குழுமங்களில் பகிர்ந்து தனது இழிவைப் பதிவு செய்து கொண்டனர். இங்கே இருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள். அவர் முகத்தில் சிரிப்பையும் தாண்டி ஒரு சோகம் தெரிந்துகொண்டுதான் இருக்கிறது.                                                                                                                                                          அதாவது கௌசல்யா இப்போது ஜீன்ஸ் அணிகிறார். கூந்தலை வெட்டி விட்டார். அதாவது கெட்டுப்போய்விட்டாராம்.  ஆண்களுடன் ஊர் மேய்கிறார். அதற்கும் மேல் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். இப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அதாவது இன்னும் முக்கால்வாசி ஆண்களுக்கு பெண்கள் ஆண் நண்பர்களுடன் பழகுவது, கைகோர்ப்பது, சேர்ந்து புகைப்படம் எடுப்பது, நெருங்கி நின்று தற்படம் (Selfie) எடுப்பது இதிலெல்லாம் ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்தக் கொடுமையையெல்லாம் எங்கே போய் சொல்லி அழ ?.பின்னே என்ன ஒரு கணவனை இழந்த பெண் எப்படி இருக்க வேண்டுமாம் ? மொட்டை அடித்து, வெள்ளைச் சேலை உடுத்தி, முக்காடு போட்டு மூலையில் அமர்ந்து கொண்டு மூக்கைச் சிந்திக் கொண்டு இருக்க வேண்டுமோ ? பெண்களை அடக்கி வைக்க நினைக்கும் உங்கள் புத்தி அப்படித்தானே போகும்.அவர் பொறியியல் பயின்றவர், செத்துப் பிழைத்த பின்னர் பெரியாரியம் பயின்றவர். அவர் அப்படித்தான் இருப்பார். அப்படி மகிழ்ச்சியாக இருந்ததால்தான், துணிவாக இருந்ததால்தான், சராசரிப் பெண்களின் அடையாளமான நீண்ட கூந்தலைத் துறந்து, ஜீன்ஸ் அணிந்து மனிதநேயராக சிந்திக்கத் தொடங்கியதால்தான் இப்படி அவர்களுக்கு தண்டனை வாங்கித்தந்து இன்று அதை நியாயப்படுத்தி பேசவும் முடிகிறது. அவர் அப்படித்தான் உடையணிவார், நண்பர்களுடன் ஊர் சுற்றுவார், சிரித்துக் கொண்டே புகைப்பத்திற்குக் காட்சி தருவார். மேடைகளில் பேசுவார், நடனம் ஆடுவார் இதற்கு மேல் அவர் திருமணமும் கூட செய்து கொள்வார். அதற்கு இப்போது என்ன ? அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சொல்ல முடியுமா ? என்ன நடந்தாலும் ஜாதிவெறியால மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் திருந்த முடியாது. உங்களிடம் நல்ல பெயர் எடுக்க தன் வாழ்க்கையை ஏன் அவர் வீணாக்க வேண்டும். முடிந்தால் மனிதர்களாக மாற முயற்சி செய்யுங்கள். யார் யாரை காதலிக்க வேண்டும் யார் யாரை காதலிக்கக் கூடாது என்று சொல்வதெல்லாம் ஒரு பண்பாடாம் அதுதான் மதமாம் கலாச்சாரமாம். இதையெல்லாம் இவர்கள் கட்டிக் கொண்டு அழ இருப்பவர்கள் சாக வேண்டுமாம். என் பங்குக்கு நானும் ஏதோ என்னால் முடிந்த மீம்கள்                                    http://feeds.feedburner.com/ blogspot/QVKqs

2 +Vote       Tags: இந்தியா தமிழகம் காதல்
 


Related Post(s):

 

ஒரு ஆண் உடல் தேவைக்கு நட்பு வளர்க்க விரும்புவதாக இருப்பின் ஆரம்பத்திலியே சொல்லிவிடுவது சரியா?

Avargal Unmaigal

ஒரு ஆண் உடல் தேவைக்கு நட்பு வளர்க்க விரும்புவதாக இருப்பின் ஆரம்பத்திலியே சொல்லிவிடுவது சரியா? ஒரு ஆண் உடல் தேவைக்கு நட்பு வளர்க்க விரும்புவதாக இரு… read more

 

விண்ணைத்தொடும் கட்டடங்கள்

rammalar

சூப்பர் உயர கட்டடங்கள் என்ற அந்தஸ்தை பெறவேண்டுமானால் அவை 980 அடி அல்லது அதற்குமேல் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்படி 2018-ல் 18 கட்டடங்கள் கட்டப்… read more

 

நயன்தாராவுக்கு அண்ணன்

rammalar

நாசர், பிரகாஷ்ராஜ் போன்று குணச்சித்திர நடிகராகவும்வில்லனாகவும் நடிப்பில் அசத்துபவர் ஸ்ரீமன். சமீபத்தில் வெளியான ‘தர்பார்’ படத்தில் நயன்தாராவின்அண்ணனாக… read more

 

இரட்டை வேடத்தில் யோகிபாபு

rammalar

சித்தார்த் நடிக்கும் ‘தக்கர்’ படத்தில் யோகிபாபுவுக்குஇரட்டை வேடமாம். அப்பா, மகன் என்று டபுள் ஆக்‌ஷனில்காமெடி செய்து பட்டையைக் கிளப்பி இருக்கிறாராம். க… read more

 

புது தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்

V2V Admin

புது தம்பதிகளுக்கான 7:30 இரகசியம் நல்ல நாள் பார்த்து, நல்ல ராசி பார்த்து, நல்ல நட்சத்திரம் பார்த்து, நல்ல லக்னம் பார்த்து சுபயோக சுபதினத்தில் திருமணம்… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  மாம்பழ வாசனை : Cable Sankar
  முரசு, செல்லினம் முத்து நெடுமாறன் பேசுகிறார் : கானா பிரபா
  ASL PLS? : வ.வா.சங்கம்
  நாக்க முக்க நாக்கா ஓ ஷகலாக்கா ஓ ரண்டக்கா : அனிதா
  மெரிக்க மாப்பிள்ளை : நசரேயன்
  பன்னீர் சோடா : அநன்யா மஹாதேவன்
  மனைவி : முரளிகண்ணன்
  ரஹ்மானின் ஆஸ்கார்! முதல் காரணம் இளையராஜாதான் : உண்மைத் தமிழன்
  ஆத்தாவும் தாத்தாவும் : செங்கோவி
  மாப்பிள்ளை தோழனும் தெரட்டிப்பாலும் : ஒரு கனாக் காலம்