கைவிடப்பட்ட வீடு – சுசித்ரா மாரன் கவிதை

Author: பதாகை

கால எறும்புகள்ஊர்தலில்கரைந்து கொண்டிருக்கிறது கைவிடப்பட்ட வீடு காணாமல் போகுமுன் யாரிடமாவதுபகிர்ந்து விடவேண்டும்துருவேறிக் கொண்டிருக்கும் சில ஞாபகங்களை கவனமீர்த்தலுக்கென்றே சப்திக்கப்பட்டகம்பிக் கதவின் ஒலிக்குறிப்பு பதின்மத்தின் இசையானதை விசிறியெறியப்பட்ட சோற்றுத்தட்டின் விளிம்பு வெட்டிய பிறை வடுவின்பின்னிருந்த வன்மத்தை பகிர்ந்து விட வேண்டும் கால எறும்புகள் நினைவுகளில் ஊரும் முன் எப்போதேனும்எச்சமிட்டுச் செல்லும் அயலூர்ப்பறவைக்கும் வீட்டின் நினைவெச்சங்களின்மொழி புரியவில்லை அன்றைய குழந்தைவீட்டின் மேனியெங்கும் கரிக்கோடிழுத்தஅம்மா அப்பா சினை ஆடுபஞ்சாரக்கோழிகளெனகுடும்பத்துடன் வாழும்குச்சுவீடு மட்டும் பகலில் எரியும் விளக்காக அரற்றுகிறது கைவிடப்பட்ட வீட்டின் பகிரமுடியா துயரத்தை

2 +Vote       Tags: கவிதை எழுத்து சுசித்ரா மாரன்
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  ஒரு நட்பு முறிந்த சோகக் கதை : உண்மைத் தமிழன்
  ஒற்றைச் சொல் கவிதைகள் : தாமிரா
  பொதுக்கூட்டம் : யுவகிருஷ்ணா
  ஏழுவின் தோழி : கார்க்கி
  நிறம் : மாமல்லன்
  உன் பயணங்களில் என் சுவடுகள்.... : nila
  சென்னை அது ஒரு ஊரு : குசும்பன்
  e-சண்டை : ச்சின்னப்பையன்
  பேருந்து..வாழ்க்கை பயணம். : வினோத்கெளதம்.
  பேருந்துப்பயணத்தில் முடிவான வாழ்க்கை : கதிரவன்